BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி தேசிய கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தேசியக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும் அம்மன் ஸ்டீல்ஸ் உரிமையாளருமாகிய சோமசுந்தரம் அவர்கள் தலைமை உரை வழங்கினார். தம்மை போன்ற முன்னாள் மாணவர்கள் வாழ்வில் மேன்மையுற தேசியக் கல்லூரி எவ்வாறு துணை நின்றது என்ற பொருண்மையில் தலைமை உரை வழங்கினார். 


அமெரிக்காவில் பணியாற்றும் திரு சங்கரநாராயணன் ரங்கநாதன், எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராஜா கணேஷ் ராம், சென்னை ஐஐடியுனுடைய இணை பேராசிரியர் முனைவர் சுதர்சன் பத்மநாபன் ஆகிய மூவருக்கும் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடல் கடந்து சென்றாலும் உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தேசியக் கல்லூரியில் கற்ற கல்வியானது தங்களை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு சென்றதை விருதாளர்கள் தங்கள் ஏற்புரைகளில் பதிவு செய்தனர்.


தங்கள் வாழ்நாளில் தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற காலம் என்பது ஒரு ஆகச் சிறந்த பொற்காலம் என்பதை சிறப்பு விருந்தினர்கள் நினைவுகூர்ந்தனர். 1960களிலிருந்து தொடர்ந்து தேசியக் கல்லூரியில் பயின்ற மேனாள் மாணவர்கள் பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முன்னாள் மாணவர் சங்க கூட்டம் தேசியக் கல்லூரியில் நடைபெறும் போது தங்களுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைப்பதாக முன்னாள் மாணவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர். நிறைவாக முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளரும் தேசியக் கல்லூரியின் துணை முதல்வரும் ஆகிய முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் நன்றியுரை நல்கினார்

நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments