BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** மாணவி விஷம் குடித்த விவகாரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம் வாபஸ்....! தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை ஏற்பு

மாணவி விஷம் குடித்த விவகாரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம் வாபஸ்....! தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை ஏற்பு

 மாணவி ஷபானா ஜாஸ்மின் திருச்சி மேல்ப்புதூர் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்... அந்த மாணவி படிக்கும் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் மன உளைச்சல் காரணமாக வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார்...


 தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியையை கண்டித்து நாளைய தினம் திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக இன்று அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி  பேச்சுவார்த்தை திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி அளவில்  நடைபெற்றது.


வட்டாட்சியர் தலைமையில் காவல் உதவி ஆணையர்,காவல் நிலைய ஆய்வாளர்,மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது


தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஷபானா ஜாஸ்மின் அவர்களுடைய தாயார் மாநில செயலாளர் திருச்சி ரியாஸ்

மாவட்ட பொருளாளர் பீமா நகர் சாகுல் மாவட்ட துணை செயலாளர்கள் காஜாமைதீன் முகமது தாஹா பழனி பாபா பேரவை செயலாளர் காஜாமைதீன் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்




மாணவி ஷபானா ஜாஸ்மின் படிக்கும் பள்ளியின் சார்பாக அதன் தலைமை ஆசிரியை துணை தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


சுமார் மூன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் அரசும் பள்ளி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் பள்ளி ஆசிரியர்களின் அனுமதி இல்லாமல் பள்ளியின் whatsapp குழுமத்தில் மாணவி ஷபானாவின் மீது அவதூறு பரப்பிய மாணவி உடனடியாக மறுப்பு செய்தி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை.

மாணவி ஷஃபானா ஜாஸ்மின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிப்பது அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது.

காலையும் மாலையும் மாணவிகள் பள்ளிக்கு வரும் பொழுதும் போகும் பொழுதும் ஆண் பெண் காவலர்களை கொண்டு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது.

ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வரும்பொழுது இரு கை கூப்பி வணக்கம் கூற நிர்ப்பந்திக்க கூடாது

என்ற கோரிக்கையும் பள்ளியின் சார்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


உள்ளிட்ட நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தால் நாளை காலை எட்டு முப்பது மணி அளவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற இருந்த st anne,s மேல்நிலைப்பள்ளி முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.



Post a Comment

0 Comments