// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு விழா - திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு விழா - திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்படவுள்ளது.. இதனையொட்டி மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்...


மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு விழா பிப்ரவரி 07 செவ்வாய் கிழமை கொண்டாடப்படவுள்ளது..திருச்சி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் திருச்சி மாநகரில் 20 இடங்களில்  கொடிகளை ஏற்றும் நிகழ்ச்சியும்,


 நலத்திட்ட உதவி மற்றும் ஆதரவற்ற முதியோர்  உணவு வழங்குவது மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் M.A முகமது ராஜா அவர்கள் தலைமை தாங்கி   கொடிகளை ஏற்றி வைத்து நலத்திட்டங்களை வழங்குகிறார்.



தமுமுக மாவட்ட செயலாளர்   முகமது இலியாஸ், மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், மாவட்டத் துணைத் தலைவர் சையது முஸ்தபா மாவட்ட துணை செயலாளர் பாலக்கரை காசி சம்சுதீன்  மணச்சநல்லூர் மாலிக் மற்றும்‌ மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Post a Comment

0 Comments