BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் – NR IAS அகாடமி நிறுவன இயக்குனர் விஜயாலயன் பேட்டி

குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் – NR IAS அகாடமி நிறுவன இயக்குனர் விஜயாலயன் பேட்டி

 குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும்..தேர்வெழுதிய மாணவர்கள் கோரிக்கை


திருச்சியில் செயல்படும்  போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி நிறுவனத்தில்(NR IAS அகாடமி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்  கடந்த 25 ஆம் தேதி நடத்திய தேர்வை எழுதிய மாணவர்கள்,  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள், அதில்... 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25 ஆம் தேதி நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது.

இதனால்  தேர்வெழுதிய தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வு எழுதிய மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


பாரப்பட்சமாக நடத்தப்பட்ட அந்த தேர்வில்  குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு நடத்தப்படவில்லை. மதியம் வழங்க வேண்டிய வினாத்தாள் சிலருக்கு காலையிலேயே வழங்கப்பட்டு, அது திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனால் மதிய தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது


இதனால் சில மாணவர்கள் காலை தேர்வு முடிந்தவுடன் இடைவெளி நேரத்தில் மதிய தேர்வு விடைகளை படித்து விட்டு தேர்வு எழுதி உள்ளனர்.


சமத்துவமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும், வருடா வருடம் தேர்வு நடத்தி உடனுக்குடன் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.


குரூப் 2 தேர்விற்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை தனித் தனியே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தினார்கள்.

Post a Comment

0 Comments