// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்களுக்கு விருது வழங்கும் விழா

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்களுக்கு விருது வழங்கும் விழா

 2021-2022 ஆம் ஆண்டிற்கான பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்க்கான விருது வழங்கும் விழா  பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 


பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் செல்வம், பதிவாளர் கணேசன், சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சாமுவேல் செல்லையா, தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் செந்தில்குமார், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இலக்குமிப்பிரபா ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 



இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ச.கருத்தான் 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருதினைப் பெற்றார்.

நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments