// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் ஹரி பஜனை

திருச்சியில் ஹரி பஜனை

திருச்சி ஶ்ரீரங்கத்தில் ஹரி பஜனை நடைபெறும். அதன் அடிப்படையில் மார்சு மாத பஜனை 05.03.2023 அன்று மாலை 6.00 மணியிலிருந்து 8.30 மணி வரை நடைபெற்றது. அது சமயம் 04.08.2023  முதல் 06.08.2023 வரை திருச்சி, ஸ்ரீராம் பஜன் மண்டலியின் 47 வது ஸ்ரீ சீதாராம ராம கல்யாண  மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம், எஸ். ஆர். கல்யாண மஹாலில் நடைபெற உள்ளதிற்கான மஹோத்ஸவப் பத்திரிக்கை ஸ்வாமியின் பாத கமலங்களில் சமர்பித்து  பிரார்த்தனை செய்யப்பட்டது. 


பத்திரிக்கையை பெஸ்ட் பம்ப் ஸ்ரீ ஸ்வாமிநாதன் வெளியிட முதல் பத்திரிக்கையை மண்டலியின் துணை தலைவர் மற்றும் எஸ். ஆர். கல்யாண மஹால் உரிமையாளர் ராஜாமணி பெற்றுக் கொண்டார். உடன் மண்டலியின் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் முனைவர் சுந்தரராமன் மற்றும் துணை செயலாளர் சுந்தர், சிவா விஷ்ணு ரவி மற்றும் சிவராமன் இருந்தனர். திரளான பாகவதர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments