NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும் சங்பரிவார பஜ்ராங்தள வினரை கைது செய்ய வலியுறுத்தியும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை காரணம் காட்டி முஸ்லிம்களை கைது செய்வதை கண்டித்தும்,


இந்த மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகுது தலைமையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் உசேன் ஷரீஃப், துணைச் செயலாளர் புகழ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜ முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.





அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா முனஹயத்தீன்,மற்றும் அகில இந்தியமுஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்,


கண்டன உரையில் அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 10 ஆண்டுகள் 15 ஆண்டுகளுக்கு முன்பதாக திருமணம் முடித்தவர்கள் ஏற்கனவே திருமணம் முடிந்தவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது குறிப்பிட்ட சமூகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது,


மேலும் இரண்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை எரித்து கொன்றது மட்டுமின்றி முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் முயற்சியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அரசு ஈடுபட்டிருப்பது ஜனநாயக துரோகம்,தண்டனை காலம் முடிவுற்று சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினர்,


ஆர்ப்பாட்டத்தின் கோஷங்களை மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா

மற்றும் தோழமைக் கட்சிகள் இந்த மூன்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்...

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சியான அமமுகவின் தலைமை

கழக பேச்சாளர் கழக அம்மா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் டோல்கேட் கதிரவன்,

தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி,மற்றும் மாநிலச் செயலாளர் முகமது இக்பால் உள்ளிட்ட தோழமைகள் கட்சிகள் பங்கேற்றனர்,

Post a Comment

0 Comments