NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி தேசிய கல்லூரியில் திறன் அறியும் போட்டி.

திருச்சி தேசிய கல்லூரியில் திறன் அறியும் போட்டி.

 திருச்சி தேசிய கல்லூரியின் உயிர்தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியில்துறையில் கல்லூரியின் பிற துறைகளிலுள்ளமாணவர்களுக்கான திறன் அறியும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் . இதில் தேசியகல்லூரியைசார்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள்பல்வேறு துறைகள் சார்பாக போட்டியில் கலந்து கொண்டனர். இவ்விழாவானது Biofest-2023என்ற பெயரில்தேசிய அறிவியல் நாளை ஒட்டி february 28-ல் நடந்தேறியது.ஆரம்ப விழாவில் தேசிய அறிவியல் நாளை ஒட்டி பாரதிதாசன்பல்கலைக்கழக இயற்பியல் துறையை சார்ந்தஓய்வு பெற்ற பேராசிரியர்லக்ஷ்மணன் சிறப்புரையாற்றினார். இதில் முதல்வர் முனைவர் K. குமார் 


கல்லூரியில் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர் அக்பர்ஷா மற்றும் பல்வேறுதுறைகளை சார்ந்த பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.இறுதியாக, போட்டிகள் முடிந்து பரிசுகள் வழங்கப்பட்டன.



Computer Application துறை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று Biofest-2023கோப்பையைகைப்பற்றினர். பரிசுகளை முதல்வர் K.குமார் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி மற்றும் தேர்வு நெறியாளர் முனைவர் T. ஶ்ரீதர் வழங்கி சிறப்பித்தனர். பின்னர், பேராசிரியர் மிரியம் சேபா நன்றியுரையாற்றினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments