BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ஸ்லிம் கிளினிக் தொடக்கம்

உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ஸ்லிம் கிளினிக் தொடக்கம்

 உலக சுகாதார நிறுவனம் மார்ச் 4, உலக உடல் பருமன் தினமாக அறிவித்துள்ளது, இதனை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், திருச்சி பொதுமக்களுக்கான நிகழ்ச்சி மற்றும் "ஸ்லிம் கிளினிக்” தொடங்கினர்.


அதிக எடை மற்றும் உடல் பருமன் என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் அசாதாரண அல்லது அதிகப்படியான கொழுப்பு திரட்சி என வரையறுக்கப்படுகிறது. 25க்கு மேற்பட்ட பிஎம்ஐ (BMI) அதிக எடை கொண்டதாகவும், 30க்கு மேல் பருமனாகவும் கருதப்படுகிறது.


இந்நிகழ்ச்சியில் கூடியிருந்த பொதுமக்களிடம் பின்வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் உரையாற்றினர். குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஹிமா பிந்து பேசுகையில்:-


 குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே உடல் பருமனை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் ஃபார்முலா சப்ளிமெண்ட்ஸ் உடல் எடையை அதிகரிக்க தூண்டுகிறது ஆகையால் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை கூறினார். 


டாக்டர். சௌமியா, அகாசுரபியில் மருத்துவ நிபுணர், சரியான எடையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம், ஹார்மோன் தொடர்பான உடல் பருமனால் ஏற்படும் சிக்கல்களையும் விளக்கினார்.


 கோஹிலாராணி உணவியல் நிபுணர், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கு சமச்சீர் உணவுமுறை அவசியம் என்றார்.


 மூத்த பொது மேலாளர்  சாமுவேல் உடல் எடையை குறைக்கும் உடல் எடை குறைப்பதில் அவசியம் மற்றும் இதனால் ஏற்படும் நன்மைகளை கூறிய மருத்துவர்களை பாராட்டினார்.


 மேலும் பொதுமக்கள் சமூகவலைத்தளங்களில் வரும் கருத்துக்களை நம்பி அதனை பின்பற்ற வேண்டாம் என்றும் தகுந்த மருத்துவர்களை நாடுவது அவசியம் என கூறினார்.


டாக்டர் சிவம் மருத்துவ நிர்வாகி மற்றும்  அனந்தராமகிருஷ்ணன் மூத்த மேலாளர் விற்பனைப்பிரிவு இருவரும் இம்மருத்துவமனையில் அனைத்து திறமை வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு விளக்கினர்.

Post a Comment

0 Comments