NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தமிழக பட்ஜெட் - SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் அறிக்கை

திருச்சி மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தமிழக பட்ஜெட் - SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் அறிக்கை

 திருச்சி மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தமிழக பட்ஜெட் - SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் முபாரக் அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தமிழக பட்ஜெட்டில்,திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் சிறப்பு கட்டிடங்கள் அமைக்கப்படும்.திருச்சி மாநகராட்சியில்  இலவச WIFI வசதியேற்படுத்தப்படும்.


ஆகிய  அறிவிப்புகளை  SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக வரவேற்கிறோம்.

ஆனால் திருச்சி மாவட்டத்திற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம்,தகவல் தொழில் நுட்ப பூங்கா, திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லாது இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.


மற்ற மற்ற மாவட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் ,தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் என்று அழைக்கப்படும் திருச்சி மாவட்டத்திற்கு எவ்வித புதிய அறிவிப்பு இல்லாதது திருச்சி பகுதி வாழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது.


திருச்சி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் திருச்சி மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை  கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார் 



Post a Comment

0 Comments