BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் - திருச்சி மாவட்ட தமஜக அழைப்பு

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் - திருச்சி மாவட்ட தமஜக அழைப்பு

 தமிழக சிறைகளில் பல வருடங்களாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிப் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும் மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் 29 ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு திருச்சி பாலக்கரையில் நடைபெறுகிறது என்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே எம் செரீப் அவர்களின் தலைமையில் சிறைவாசிகளின் விடுதலைக்காக பல ஆண்டு காலமாக தமஜக வின் சார்பாக தொடர் போராட்டங்கள் சட்டமன்றம் நோக்கிய நடை பயணங்கள்.கண்டன ஆர்ப்பாட்டங்கள்.கண்டன பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முன்னெடுத்து வருகிறது என்றும்.


அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் வரை தமிழக எம்எல்ஏக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து தமஜகவின் சார்பாக சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோரிக்கை வைக்கும் முன்னெடுப்பினை  தமஜக தலைவர் கே எம் சரிப் அவர்களின் தலைமையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை 


சம்பந்தமான கோப்புகளையும் தமஜக தலைவர் கே.எம்.செரிப் அவர்களின் தலைமையிலான குழு வழங்கியது எனவும்.அடுத்த கட்ட முயற்சியாக நமது திருச்சி பாலக்கரையில் சிறைவாசிகளின் விடுதலைக்காக மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டத்தை திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்துகிறது எனவும்.‌இந்த கூட்டத்திலேயே சிறப்புரையாற்றுவதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினுடைய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் எம் எல் ஏ அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவர் சி மகேந்திரன்  அவர்களும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினுடைய மாநில துணைத்தலைவர் டிவி கதிரவன் அவர்களும் மே 17 இயக்கத்தினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய திருமுருகன் காந்தி அவர்களும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய தலைவர் குடந்தை அரசன் அவர்களும் தமிழர் விடியல் கட்சியினுடைய தலைவர் இளமாறன் அவர்களும் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினுடைய தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்களும் அதிமமுக தலைவர் பசும்பொன் பாண்டியன் அவர்களும் ஏ ஐ டி யூசி உடைய மாநில துணைத்தலைவர் பி எல் ராமச்சந்திரன் அவர்களும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பொதுச் செயலாளர் ஐயா ஆதிதிராவிடர் அவர்களும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய தலைவர் கே எம் கே ஹபீப் ரஹ்மான் அவர்களும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய துணைத் தலைவர் இமாம் ஆர்.ஹஸ்ஸான் பைஜி அவர்களும். திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய துணைத் தலைவர் பா உதுமான் அலி அவர்களும் சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் ஐயா கென்னடி அவர்களும் சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் கமருதீன் அவர்களும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் சண்முகராஜா துணை பொதுச்செயலாளர் சபி அகமது அவர்களும் மாநில துணைத் தலைவர்  அன்சர் மில்லத் அவர்களும் மாநிலத் துணைத் தலைவர் மெஹராஜ்தீன் அவர்களும் இணையதள பொறுப்பாளர் சரிப்ராசிக் அவர்களும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கா. ராஜசேகர் அவர்களும் மாநில செயலாளர் ரியாஸ் அவர்களும் மாநில செயலாளரும் திருச்சி மாவட்ட தலைமை பொறுப்பாளருமான பாப்ஜஹான் அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்...













எனவே சிறைவாசிகளின் விடுதலைக்காக உங்கள் குரலையும் உயர்த்த இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக முழக்க மிட நீங்களும் களத்திற்கு வர வேண்டும் என்று திருச்சி மாவட்ட பொதுமக்களுக்கு தாமாக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அழைப்பு விடுத்துள்ளார்.

 















நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட துணை செயலாளர்கள் காஜாமைதீன்,முகமது தாஹா.மாவட்ட பொருளாளர் பீமநகர் சாகுல். மாவட்ட பேச்சாளர் பாலக்கரை ஜாகிர் ஷெரீப்.

பழனி பாபா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.கே.காஜமைதீன்.மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தென்னூர் கலில்ரகுமான் வர்தகர்அணி மாவட்ட செயலாளர் அப்துல் முனாப் திருச்சி மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ் பீர் முகமது திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் ரபீக்ராஜா மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பெஸ்ட் பாருக் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முகமது இக்பால் பழனி பாபா பேரவை மாவட்ட துணை செயலாளர் அபூபக்கர் சித்திக் ஹஜ்ரத்.கிழக்கு சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் முபாரக் அலி மாணவரணி செயலாளர் அப்துல் அஜீஸ் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் பாலக்கரை பகுதி செயலாளர் பாஷா கான் ஜங்ஷன் பகுதி செயலாளர் பீமநகர் சித்திக் உறையூர் பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா பாலக்கரை பகுதி துணை செயலாளர் முஸ்தாக் ஆட்டோ தொழில் சங்க கிழக்கு தொகுதி செயலாளர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள் எனவும் அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments