BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மாவட்ட தமஜக வின் முப்பெரும் விழா தலைவர் செரீஃப் பங்கேற்பு தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அழைப்பு

திருச்சி மாவட்ட தமஜக வின் முப்பெரும் விழா தலைவர் செரீஃப் பங்கேற்பு தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அழைப்பு

திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக இன்றைய தினம் மத நல்லிணக்கம் மற்றும் சகோதர சமுதாய ஒற்றுமை போற்றும் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி. 2023 தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம் மூலம் கட்சியில் இணைந்த தோழர்கள் தலைவர் கே.எம்.சரிப் எம்.ஏ.அவர்கள் முன்னிலையில் கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளது..



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பழனி பாபா பேரவையின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் இன்றைய தினம் தமஜக தலைவர் கே எம் சரிப் அவர்கள் கலந்து கொள்ள திருச்சி வருகை தருவதால் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்...



இன்றைய தினம் திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்களின் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் முதல் தளத்தில் நடைபெற உள்ளது




அடுத்த நிகழ்வாக 2023 தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின் மூலம் கட்சியை இணைந்த தோழர்கள் கட்சியின் தலைவர் கே எம் செரிப் அவர்கள் முன்னிலையில் கட்சியில் இணையும் விழா மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு அணியான பழனிபாபா பேரவையின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழனி பாபா பேரவையின் மாவட்ட செயலாளர் ஆர் கே காஜா அவர்களின் தலைமையிலும் நடைபெற உள்ளது...



 நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமஜக திருச்சி மாவட்ட  செயலாளர் ராயல் சித்திக் அழைப்பு விடுத்துள்ளார்

Post a Comment

0 Comments