// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் காரைக்குடி பகுதி சேர்ந்த தேவசேனா என்பவர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-



காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் தேவசேனா. இவர் திருச்சி தில்லை நகர் பகுதியில் இயங்கி வரும் ரைட் சிட்டி என்ற நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்தை இரண்டே வருடங்களில் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியதை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தேவசேனா ரூபாய் 82 லட்சம் பணத்தை ரைட் சிட்டி உரிமையாளர்களான சுகன்யா கிருஷ்ணமூர்த்தி கமலவேணி சதீஷ் ரீவான பேகம் ஆகியரிடம் வழங்கினார்.



இந்நிலையில் கடந்த 5 வருடங்கள் ஆகியும் பணம் திரும்ப தரப்படாததால் பாதிக்கப்பட்ட தேவசேனா தேவிகா ஷில்பா கண்ணன் ராஜ் ஆகியோர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தங்களை ஏமாற்றி வாங்கிய ஒன்றரை கோடி பணத்தை மீட்டு தர கோரியும் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments