BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மமக கொடி அகற்றம் - அதிகாரிகளை சந்தித்து மனு

மமக கொடி அகற்றம் - அதிகாரிகளை சந்தித்து மனு

 தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கடந்த 26 ஆண்டுகளாக பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பின் கொடிகள், திருச்சி மாநகரத்தின் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மாநில நிர்வாகிகளின் மூலமாக ஏற்றப்பட்டு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது என்பதை தாங்களும், மக்களும் நன்றாக அறிவீர்கள். 


சமீப காலமாக எங்கள் அமைப்பு மற்றும் கட்சியின் கொடி கம்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி காவல்துறையின் பரிந்துரையின் பேரில் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.


இந்து அமைப்புகளை திருப்திப்படுத்த  காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்வது "திராவிட மாடல் ஆட்சி”-யை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே அமைதி நிலவும் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் விஷம சக்திகளுக்கு இடம்தராமல் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து திருச்சி மாநகரத்தில் பல ஆண்டு காலமாக இருந்த கொடி கம்பங்களை தாங்கள் மூலமாக அகற்றியதை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு முறையான அனுமதி வழங்கும்படி மாண்புமிகு திருச்சி மாநகராட்சி மேயர், உயர்திரு. மாநகராட்சி ஆணையர் மற்றும் உயர்திரு. காவல்துறை ஆணையர் அவர்களிடம் அகற்றப்பட்ட கொடி கம்பங்களை மீண்டும் அமைத்து தர கோரிக்கை மனுவை மாவட்ட தலைவர் பைஸ் அகமது, M.C., வழங்கினார்.


இந்த நிகழ்வில்  மாவட்ட தமுமுக செயலாளர் இப்ராஹிம்ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹீமாயின் கபிர் மற்றும் நிர்வாகிகள் அப்துல் சமது, அசாருதீன், (தர்கா)அப்துல் சமது, ரகுமான், இம்ரான், பஜுலுல் ரஹ்மான், முபராக், சதாம், ரஜாக், சதாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




Post a Comment

0 Comments