NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** வணிகவியல் துறை மாணவ மாணவிகளின் பிரிவு உபசார விழா

வணிகவியல் துறை மாணவ மாணவிகளின் பிரிவு உபசார விழா

திருச்சி தேசியக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பிரிவில் 2020 ல் சேர்ந்து 2023 ம் ஆண்டு நிறைவு செய்யும் மாணவ, மாணவிகள்  பிரிவு உபசார விழா கல்லாரியில் உள்ள ஆம்ஃபி தியேட்டரில் நடத்தினார்கள்.. 


அதில் மாணவ, மாணவிகள் அனைவரும் சேர்ந்து வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர்   ஆர். சுந்தரராமன் 31.07.2022 அன்று 60 அகவை முடித்து ஓய்வு பெற்று, மீளப்பணியில் 01.08.2022 முதல் பணி செய்து, 28.04.2023 பணி நிறைவு பெறுவதால் அவருக்கு நன்றி பாராட்டும்  வகையில் நினைவு கேடயத்தை மூன்றாம் ஆண்டு பயிலும் கிருஷ்ணபிரஸாத், முரளிதரன், நிதிஷ்குமார் மற்றும் சிரஞ்சீவி வழங்கினர். 

கல்லூரி முதல்வர் கி.குமார் பொறுப்பு      அனைத்து வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments