BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு இலவச மருத்துவ முகாம்

ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு இலவச மருத்துவ முகாம்

ஜாலியன்வாலா பாக் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக 13 ஆம் தேதி  மத்திய அரசின் கஸ்டம்ஸ் துறை மற்றும் மதுரம் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நவலூர் குட்டப்பட்டு என்ற கிராமத்தில் வைத்து ஊராட்சி மன்ற  தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் சிறப்பாக நடந்தது....



சிறப்பு விருந்தினராக திரு ஜோசப் யுவராஜ் ஏர்போர்ட் கண்காணிப்பாளர் மற்றும் ஏடிசி திரு விகாஸ் நாயர் மற்றும் டி இ ஜி திருமதி இளமதி ஆகியோர் பங்கேற்றி மாபெரும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். 




இதில் சுமார் 120 கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர். மருத்துவ முகாமில் மதுரம் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷர்மிலி மதுரம்  நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினார். 


வந்திருந்த கிராம பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, இடை, இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனை அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டது.

Post a Comment

0 Comments