NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் The Road Yet To Be Taken நூல் வெளியீட்டு விழா

திருச்சி தேசிய கல்லூரியில் The Road Yet To Be Taken நூல் வெளியீட்டு விழா

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின்துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் எழுதிய The road yet to be taken என்ற நூலின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி இரயில்வேகாவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அவர்கள் நூலின் முதல் பிரதியை வெளியிட கரூர் மாநகராட்சி ஆணையர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

விழுப்புரம் மாஸ் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜான்சன் பிரேம்குமார்நூலினை அறிமுகம் செய்து பேசினார். தேசியக் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருஊர்ஸா, கல்லூரி முதல்வர் முனைவர் குமார், கரூர் மாநகராட்சி ஆணையர் திரு இரவிச்சந்திரன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ..


இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிகளை தம் நூலில் நூலாசிரியர் குறிப்பிடுவதோடு நின்று விடாமல் உணவு முறைகளில் செலுத்த வேண்டிய கவனம் குறித்தும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளதை கரூர் மாநகராட்சி ஆணையர் தம் வாழ்த்துரையில் பதிவு செய்தார். திருச்சிராப்பள்ளி இரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் அவர்கள் நூலினை ஆய்வு செய்து ஆய்வுரை மற்றும் சிறப்புரை நிகழ்த்தினார்...



நூலாசிரியர்கள் சமூகத்தோடு ஒன்றிணைந்து செயல்படுகிற போதுதான் இது போன்ற நல்ல நூல்கள் உருவாகின்றன என்றும் இது போன்ற தரமான நூல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றும் உரையாற்றினார். தமிழர்கள் தமிழில் தன்னம்பிக்கை நூல்கள் நிறைய படைத்துள்ளனர். தமிழர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்த போதும் ஆங்கிலத்தில் இதுவரை தன்னம்பிக்கை நூல்கள் படைத்ததில்லை என்ற குறையை முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் போக்கியுள்ளதை சுட்டிக்காட்டினார்....


நூலாசிரியர் இது போல் தொடர்ந்து நூல்களைப் படைக்க வேண்டும் என்றும் இந்த நூலினைத் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் சிறப்பான முறையில் பாராட்டிப் பேசினார்.

நிறைவாக நூணசிரியர் முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் ஏற்புரை மற்றும் நன்றியுரை நல்கினார். விழாவின் ஓர் அங்கமாக உடற்கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது...


நிருபர் ரூபன் 


Post a Comment

0 Comments