BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் கேரளா ஸ்டோரி மற்றும் பர்ஹானா திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்க கூடாது தமுமுக மாவட்ட ஆட்சியரிம் மனு

திருச்சியில் கேரளா ஸ்டோரி மற்றும் பர்ஹானா திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்க கூடாது தமுமுக மாவட்ட ஆட்சியரிம் மனு

 தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது... 



இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரு தாய் மக்களாக மாமன், மச்சான் உறவுமுறையுடன் வாழக்கூடிய இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மக்களிடையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமிய வாழ்வியலுக்கு எதிராகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது. எந்தவெரு ஆதாரமும், சாட்சிகளும் இல்லாத ஒன்றை பொய்யாக (வதந்தி) உருவாக்கியும் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. முஸ்லீம் பெண்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. இத்திரைப்படம் பொது அமைதியை சீர்குலைக்கும் எண்ணத்துடனும், வஞ்சகத்துடனும் வெளியாகியுள்ளது.


இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் அமைதியையும் போதிக்கும் மார்க்கம். உலகளவில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றக்கூடிய மார்க்கம் ஆகும். மனித நலன்களுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு தீய செயலலையும் தூண்டாத மார்க்கம்.

இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்கின்ற பெண்கள் ஐஎஸ்‌ஐஎஸ்  தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு மூளை சலவை செய்யப்படுவதாகவும், இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்துவதாகவும், ஒரு தவறான கருத்தை பரப்பும் விதமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.


மேலும், மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக தமிழகத்தில் வாழக்கூடிய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வஞ்சக சூழ்ச்சியோடு இத்திரைப்படம் அமைந்துள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தமிழக திரையரங்குகளில் ஒளிபரப்ப திரையிட வந்துள்ளது மிகவும் மன வேதனையாகவும் உள்ளது.


எனவே மேற்சொல்லியுள்ள இத்திரைப்படமான கேரளா ஸ்டோரி மற்றும் அடுத்து வர உள்ள பர்கானா என்கின்ற திரைப்படத்தையும் திருச்சி மாவட்ட திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்ககூடாது எனவும், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதால், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Post a Comment

0 Comments