// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** உத்தரகாண்டில் இஸ்லாமியர் மீது தாக்குதலை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்

உத்தரகாண்டில் இஸ்லாமியர் மீது தாக்குதலை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்

 உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் மீது தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.



திருச்சி மாநகர் மாவட்டம் அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்  தலைமையில் நடைபெற்றது.கண்டன உரையை அகில இந்திய முஸ்லிம் லீக் மாநில தலைவர் காஜா மொய்தீன்,மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தரகாண்ட், உத்தரகாசி ப்ரோல உள்ளிட்ட பகுதிகளில் லவ் ஜிகாத் என்ற போலி வதந்தியால் இஸ்லாம்  மக்களுடைய வீடுகள், கடைகள்,  இஸ்லாமிய மக்களை ஊரை விட்டு விரட்டிக் கொண்டு இருப்பதை   கண்டித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடுத்து நிறுத்திட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உசேன் ஷெரிப், ராஜாமுகமது,ஷேக் அப்துல்லா, காஜா மொகிதீன்,  உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



 

Post a Comment

0 Comments