// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி தேசிய கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

திருச்சி தேசிய கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.




கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் தலைமையேற்று யோகா தின விழாவைத் தொடங்கி வைத்தார். கலைமாமணி திரு."யோகா"இராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று யோகக் கலையின் பல்வேறு நிலைகள் குறித்து செயல்முறை விளக்கமளித்து பயிற்றுவித்தார். 



தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் திருமதி பழனீஸ்வரி ஆழ் மன இயக்கம் மற்றும் மன ஒருமைப்பாடு குறித்து விளக்கினார். யங் இந்தியன்ஸ் அமைப்பினர், கல்லூரியின் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை அலுவலர்கள்,  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் து.பிரசன்னபாலாஜி அவர்கள் யோகா தின விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments