NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கோட்டை அனைத்து வியாபாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்

கோட்டை அனைத்து வியாபாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்

  கோட்டை அனைத்து வியாபாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இந்த ஆலோசனை ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி ஒரு நிமிடம் செலுத்தப்பட்டது.


சங்கத்தின் வளர்ச்சிக்காக சங்க உறுப்பினர்கள் சந்தா தொகையை 1 ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதிக்குள் செலுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உறுப்பினர் பாதுகாப்பு குறித்தும் ஒற்றுமை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது


சங்கத்தின் வளர்ச்சியை கருதி சங்க உறுப்பினர்கள் சொந்தமாக சங்கத்திற்கு ஒரு நாற்காலி வாங்கிக் கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பொதுக்குழு கூட்டம்  மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க நிர்வாக குழு கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.


சங்கத்தின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.


சங்கத்தின் வளர்ச்சிக்கு அதிக அளவில் புதிதாக உறுப்பினர் சேர்ப்பது‌ என தீர்மானிக்கப்பட்டது. 


கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டம் இனிதே முடிந்தது.


நிருபர் - முகமது அலி ஜின்னா 

Post a Comment

0 Comments