BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசிய கல்லூரியில் புதிய மாணவர்கள் வருகையை வரவேற்கும் நிகழ்வு

திருச்சி தேசிய கல்லூரியில் புதிய மாணவர்கள் வருகையை வரவேற்கும் நிகழ்வு

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் புதிய மாணவர்களின் வருகையை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.



கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கி தலைமை உரை நிகழ்த்தினார். காந்தியடிகள், விவேகானந்தர், ஜவகர்லால் நேரு, ஜெனரல் கரியப்பா, போன்ற பாரதம் தந்த பெரிய மனிதர்கள் பலர் தேசியக் கல்லூரிக்கு வருகை தந்து சிறப்பித்ததை எடுத்துரைத்துத் தலைமை உரை வழங்கினார்.







திருச்சிராப்பள்ளி மாவட்ட காகித விற்பனையாளர் சங்கத் தலைவர் திரு. முத்துமாணிக்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். இன்றைய மாணவர்கள் துரித உணவுகள், இணையம் முதலான நவீனத்துவத்தில் தங்களை மூழ்கடித்துக் கொள்ளாமல் சமூக அக்கறை உள்ளவர்களாகத் தங்களைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்களைப் பேணிக்காப்பதில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் உரை நிகழ்த்தினார். திரை நடிகர்களின் படங்களுக்குப் பாலாபிஷேகம் செய்வதையும் அவர்களை அடியொட்டியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் மிகவும் தவறு என்றும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்பவர்கள் தான் சமூகத்தில் தலை சிறந்த மனிதர்களாக உருவாக முடியும் என்றும் உரையாற்றினார். மேலும் தேசியக் கல்லூரி என்பது மிகப்பெரிய ஆளுமைகளைத் தந்த கல்வி நிறுவனம் என்பதையும் இங்கு படிப்பதால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பெருமைகளையும் தகுந்த எடுத்துக்காட்டுகளோடு உரை நிகழ்த்தினார். நிறைவாக துணை முதல்வர் முனைவர் இளவரசு நன்றியுரை நல்கினார். புதிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்


நிருபர் ரூபன்.

Post a Comment

0 Comments