BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** போலி மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழுமம் எச்சரிக்கை, போலி மருத்துவர்களை கைது செய்ய தமிழக அரசுக்கு வேண்டுகோள்

போலி மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழுமம் எச்சரிக்கை, போலி மருத்துவர்களை கைது செய்ய தமிழக அரசுக்கு வேண்டுகோள்

போலி மருத்துவர்களை உருவாக்கும் மதுரை. MIMS நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் MIMS-மது இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனம் கடந்த பல வருடங்களாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட எலெக்ட்ரோ ஹோமியோபதி' என்ற படிப்பிற்கான சான்றிதழ்களை பணத்திற்காக இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.மதுரை உயர்நீதிமன்றம் எலெக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை இந்தியாவில் தடை செய்ய்துள்ள திருப்புகளெல்லாம் தெரிந்தும் கூட, பணத்திற்காக எலெக்ட்ரோ ஹோமியோபதி சான்றிதழ்களை அச்சடித்து விநியோகம் செய்து வருகிறார்.



இந்த நிறுவனத்தை தனி நபர் ஒருவர் நடத்தி வருகிறார் இவர் தனக்கு தானே 'இரட்சகன் பரத்' என சொல்லிக்கொண்டு, தன் நிறுவனத்தை கல்லுரி எனவும் தன்னை ஒரு

அரசு பதிவு பெற்ற மருத்துவர் எனவும், 2 ஆண்டுகளில் 8 பயிற்சிக்களுக்கான சான்றிதழ்களை பணம் கொடுத்து,வாங்கி தன் பெயர்க்கு பின்னால் பல டிகிரிகளை போட்டுக்கொண்டு விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகிறார்.5 வருட படிப்புக்கான சான்றிதழை 5 நாட்களில் பணம்

கொடுத்தால் உடனே கொடுத்து விடுவார். இப்படி கடந்த 10 வருடங்களாக பல கோடிக்கும் மேல் சம்பாதித்து, கோவை‌ அருகே ஏக்கர் கணக்கில் இடம் வாங்கியுள்ளார்.பணத்திற்காக பல சங்கங்களை ஏற்படுத்தி உறுப்பினர்

கட்டணம் ரூ.5000/- முதல் ரூ.10000/- வரை நபர் ஒருவருக்கு,FAPA - அக்குபஞ்சர் சிகிச்சையாளர் சங்கங்களின் கூட்டமைப்பிலும், மற்றும் NAC- NATIONAL ACUPUNCTURE‌ COUNCIL என்ற சங்கத்திலும் ஏறக்குறைய ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்து, பல கோடிக் கணக்கில் பணம் வசூலித்து வருகிறார். 28.04.2023 அன்று மதுரை



உயர்நீதிமன்றம் அக்குபஞ்சர் கிளீனிக் நடத்த கூடாது என

தீர்ப்பளித்தது தெரிந்தும் அக்குபஞ்சர் படித்த மக்களை

ஏமாற்றி, அசோசியேஷன் என்ற பெயரிலும் பணம் பறித்து

வருகிறார்.

தன்னுடைய விளம்பரத்தில் BEMS அதாவது University grand

commission அங்கீகாரம் பெறாமல் Bachelor degree -க்கான

சான்றிதழை அச்சடித்து கொடுத்தால். இந்த சான்றிதழை

பெற்ற 190 நபர்களின் விவரங்கள் உள்ளன.

மேலும் மருத்துவர், டாக்டர் என MBBS.,MS படித்தவர்கள்

மட்டுமே போட வேண்டும். ஆனால்MIMS- ல் பணம் கொடுத்து

சான்றிதழ் வாங்கிய 190 பேரும் டாக்டர் என கூறிக் கொண்டு

போலியாக மருத்துவம் பார்த்து, மக்கள் உயிரோட

விளையாடுகின்றனர்.

MIMS நிறுவனத்தில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான

NEEDLE MAGIC, மற்றும் Max Care என்ற நிறுவனம் மீது

வழக்கறிஞர்கள் குழு கொடுத்த புகார் தொடர்பாக, திருச்சி

சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் மருத்துவ குழு ஆய்வு செய்து

நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வழக்கை அழகு ராஜா மற்றும் 

 வீராண்ணா வழக்கறிஞர் குழு நடத்தி வருகின்றனர் 

Post a Comment

0 Comments