BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மக்கள் உரிமை கூட்டணி தலைமை குழு கூட்டம்

மக்கள் உரிமை கூட்டணி தலைமை குழு கூட்டம்

 மக்கள் உரிமை கூட்டணி தலைமை குழு கூட்டம் திருச்சி இப்ராஹிம்  பார்ஃக் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது,


இதில் மக்கள் உரிமை கூட்டணி திருச்சி மண்டல செயலாளர் காசிம் தலைமயில் நடைபெற்ற தலைமை குழு கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டணியின் நிர்வனர் சுப,தெண் பாண்டியனின் 60 வது  பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவருக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர்,


சுப.தெண் பாண்டியன், பேசுகையில் இந்த தலைமை குழு கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது,குறிப்பாக,

ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து மிகவும் மோசமான சோகத்தையும் அச்சத்தையும், பதுகாப்பு குறித்தும் ஏற்படுத்தியுள்ளது


இது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரனை நடத்த வேண்டும் மத்திய மாநில அரசுகள் இது போன்ற விபத்துகள் நடக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,


திருச்சி மத்திய மண்டல சார்பில் திருச்சி அரியமங்கலம், திருவெறும்பூர், நத்தமா மாடிபட்டி, திருச்சி நீதிமன்றம். அருகே உள்ளிட்ட பகுதியில் மக்கள் உரிமை கூட்டணியின் பெயர் பலகை அமைத்தல் கொடியேற்றுதல் கிளை தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம்,


ஜூலை மாதம் முதல் வாரத்தில் செயல்பாட்டாளர்கள் பயிற்சி முகாம் நடத்துவது அந்த கூட்டத்தில் 50, செயல்பாட்டாளர்களை பங்கேற்க வைப்பது

அதில்  மனித உரிமைகள்,மனித உரிமை மீறல்,என்னென்ன என்பது அது சம்பந்தமான பயிற்சி அளிப்பது,

தமிழகத்தில்,

நாமக்கல், சேலம், சிவகங்கை,மாவட்டங்களில் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும்,ஏற்பாடு செய்ய உள்ளோம்,

குறிப்பாக செம்டம்பர் மாதம் 17ம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மிக பெரிய பொதுகூட்டம் நடத்தி தொழிலாளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளோம்,

புதுகோட்டை மாவட்டத்தில் நடந்த வேங்கை வையல் பிரச்சனையில் அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது, இது மனித உரிமை மீறலாகும், இது குறித்து மக்கள் உரிமை கூட்டணி சார்பில் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளோம், தொடர்ந்து அரசு இந்த பிரச்சனையில் மெத்தன போக்காக இருக்க கூடாது. உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,


நீர்நிலைகளை ஆக்கிரமைப்பது குறித்தும் போராட்டங்கள் நடத்த வும் முடிவு எடுத்துள்ளோம்,

உள்ளிட்டவைகளை

தீர்மானமாக எடுத்துள்ளதாக தெரிவித்தார்,


இதில்,மாவட்டத் தலைவர் அல் இலாஹு, மாநகர செயலாளரும் பூ வியபாரிகள் சங்க தலைவருமான குத்புதீன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜோசப், மேற்கு மாவட்ட செயலாளர் தனபால், கிழக்கு மாவட்ட செயலாளர் விடியல் வாசுகி, மாவட்ட பிரதிநிதி கார்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments