BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியருக்கு சர் ஜே.சி.போஸ் நினைவு விருது

திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியருக்கு சர் ஜே.சி.போஸ் நினைவு விருது

 திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியின் தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.பி.ஆனந்த் அவர்கள் சமீபத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் கண்காணிப்பு விருது வழங்கும் விழாவில் ஜே.சி.போஸ் நினைவு விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் என். எஸ். சந்தோஷ் குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் எமரிட்டஸ் பேராசிரியர் டாக்டர் ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் விருது மற்றும் பதக்கத்தை வழங்கினர். மருத்துவ தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி சாதனைகளுக்குகாக இவ்விருது வழங்கப்பட்டது.



ஐஐடி- சென்னை  ஆய்வாளரான டாக்டர் வி.காமகோடி மற்றும் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் திரு. ஜே.சி.போஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றனர்.



சென்னையைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு, லயோலா கல்லூரியின் அறிவியல் டீன் டாக்டர். ஜூடித் விஜயா, மெட்டீரியல் சயின்ஸ் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், சைஹப் மற்றும் பிஹேவியர் கிளினிக்கின் நிறுவனர்-இயக்குனர் டாக்டர். நப்பின்னை சேரன், மருத்துவ உளவியல் மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கான பங்களிப்புக்காகவும் விருதுகள் வழங்கப்பட்டது,

பழங்கால நூல்களின் அடிப்படையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் ஐஐடி - மும்பையின்      கே. ராமசுப்ரமணியன், ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் தலைவர் டாக்டர். ஜே. ஜெகநாதன், ஜம்மு மற்றும் காஷ்மீர்  தேசிய பாதுகாப்பு பங்களிப்புக்காகவும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் டாக்டர். என். ஜெயக்குமார், பயோ-இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் கணக்கீட்டு உயிரியலில் பங்களிப்புக்காகவும் இந்த விருது விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய அறிவியல் கண்காணிப்பு நிறுவனர் மற்றும் இயக்குனர் டி.கே.வி. ராஜன் சிறப்பாக செய்திருந்தார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments