// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் 2023-2024-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய தலைவராக பிரியா வனராஜ், செயலாளராக ஷோசன் செரியன், பொருளாளராக வனஜா ,மற்றும் நிர்வாக குழுவினருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். 



ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக பதவி ஏற்பு விழாவையொட்டி மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு தையல் இயந்திரமும், பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 




ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் உதவி ஆளுநர் வளர்மதி குமரேசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜானகி ராஜசேகர் உட்பட முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments