BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தர்கா மற்றும் அடக்கஸ்தலம் இடிப்பு...! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்

தர்கா மற்றும் அடக்கஸ்தலம் இடிப்பு...! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே, அனார் பாக் தர்கா மற்றும் கபர்ஸ்தானை நேற்று அதிகாலை மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.அதையடுத்து அப்பகுதியில் உள்ள முஸ்லீம் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.



மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையர்கள் கென்னடி, நிவேதா லெட்சுமி மற்றும் தில்லை நகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்...


இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து அனைவரும் போராட்ட முடிவை கைவிட்டனர்.



மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மூன்று நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் 2 பேரை கைது செய்தனர்.


இச்சம்பவத்தால் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இதை தொடர்ந்து இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த அனைவரும் தென்னூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் ஆலோசனை கூட்டத்தை ஈடுபட்டனர் 





அந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். வக்கோடுக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் பள்ளிவாசலை அமைத்து தர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர் பல்வேறு பணிகளில் இருப்பதால் நேரில் வர முடியாத சூழ்நிலை உள்ளது என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் வந்து இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜமா அத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் இனாமுல் ஹசன் கூறியது.. 

திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் இருந்த தர்கா மற்றும் அடக்கஸ்தலம் 

இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்னும் 10 நாட்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த இடம் யாருக்கு சம்பந்தப்பட்டது எனவும் ஆவணங்கள் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தவறுகள் நடந்திருந்தால் சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்ததாக தெரிவித்தனர். 

10  நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட முடிவை குறித்து அறிவிக்கப்படும் என இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments