BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** கிரசண்ட் அல் அமீன் ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பில் உம்ரா பயணம் சென்ற இஸ்லாமியர்கள்

கிரசண்ட் அல் அமீன் ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பில் உம்ரா பயணம் சென்ற இஸ்லாமியர்கள்

 கிரசண்ட் அல் அமீன் ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பில் உம்ரா பயணம் சென்ற இஸ்லாமியர்கள்

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று உலக மக்களை அச்சுறுத்தியது பல நாடுகள் தங்களின் எல்லைகளை மூடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது..


ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் பலரும் தவித்து வந்தனர் வெளிநாடுகளில் வேலை செய்யும் பலரும் தாய் நாடு திரும்ப முடியாமல் சிக்கி அவதிப்பட்டனர்‌



கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு  சவுதி அரேபிய அரசு தடை விதித்தது. சவுதி அரேபியாவில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8,300 பேர் உயிரிழந்துள்ளனர்



இஸ்லாமியர்களின் ஜந்து கடமைகளின் ஒன்றான ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள கிரசண்ட் அல் அமீன் ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பில் உம்ரா பயணம் மேற்கொள்ள சவூதி அரசு அனுமதி அளித்துள்ளது.

கிரசண்ட் அல் அமீன் ஹஜ் உம்ரா சர்வீஸ் உரிமையாளர் முகமது பாரூக், மற்றும் முகமது நிஷார் ஏற்பாட்டிலும் 

திருச்சியில் இருந்து 40 பயணிகள்  இன்று காலை ஶ்ரீலங்கன் விமானத்தில் இலங்கை வழியாக ஜித்தா சென்றடைந்தனர்..அங்கிருந்து சவூதி மக்காவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர்..

கடந்த ஆண்டு வரை ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையில் இருந்து மட்டுமே பயணிகள் சென்று வந்தனர்..

புனித பயணம் செல்லும் பயணிகள் சிரமம் கருதி இந்த ஆண்டில் இருந்து ஶ்ரீலங்கன் விமானம் திருச்சி இலங்கை வழியாக ஜித்தா வரை செல்ல விமான சேவை வழங்கியுள்ளது 

உம்ரா செல்லும் பயணிகளுக்கு ஆலோசகர் ஷேக் தாவூத் உம்ரா பயணம் சிறப்பு குறித்து சுற்றி பார்க்கும் இடங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

Post a Comment

0 Comments