BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆதிநாதன் ஆணையம் என்ன ஆனது? தமிழக அரசுக்கு தமஜக தலைவர் சரீப் அறிக்கை

இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆதிநாதன் ஆணையம் என்ன ஆனது? தமிழக அரசுக்கு தமஜக தலைவர் சரீப் அறிக்கை

இஸ்லாமிய ஆயுள் சிறை வாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆதிநாதன் குழு ஆணையம் என்ன ஆனது என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் சரீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்....





அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 





இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் உட்பட ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது







குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆக போகிற நிலையில் அந்த குழு என்னவானது? அதன் பரிந்துரை என்ன ஆனது ? என்பது பற்றி எந்தவித தகவலும் இதுவரை இல்லை இந்த குழு அமைக்கப்பட்ட போது இதை இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றனர்




தற்போது இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் வாய் திறக்கவில்லை... அவர்கள் மட்டும் அல்ல தமிழக அரசும் ஆதிநாதன் குழு பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர்.. நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுள் சிறைவாசிகள் ஆயிரத்திற்கும் அதிகமான நீண்ட நாள் சிறைவாசிகள் இவர்களின் வாழ்வு இப்போது ஆதிநாதன் குழு அறிக்கையில் உள்ளது.




 எனவே ஆதிநாதன்  குழு அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.. இல்லையென்றால் அந்த குழு அறிக்கை தயாரிக்க ஏன் என்ற விபரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே‌.எம். சரீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்..

Post a Comment

0 Comments