// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** சிறை வாசிகள் விடுதலை குறித்து தமிழக முதல்வருக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

சிறை வாசிகள் விடுதலை குறித்து தமிழக முதல்வருக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்காக தமிழக முதல்வருக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கோரிக்கை வைத்துள்ளார்.

 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர், ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற ஏமாற்றம் போல இந்த ஆண்டும் இஸ்லாமிய சிறைவாசிகள் புறக்கணிக்கப்படுவது முஸ்லிம் சமுதாய மக்களிடத்தில் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.


தற்போது இந்த வருட அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறைவாசி விடுதலை அவர்களுடைய காலம் மற்றும் தண்டனையை மட்டும் அளவுகோலாக வைத்தால் நீதியாக இருக்கும் ஆனால் முதல்வர் அவர்களே மதத்தை வைத்து விடுதலையை முடிவு செய்வது என்பது இஸ்லாமிய சமூகத்தாருக்கு இழைக்கும் அநீதியாகும் இந்த சமூகம் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முழு ஆதரவையும் கொடுத்தது என்பதனை மறந்துவிட வேண்டாம் எனவே சமூக நீதி அரசு என பிரகடனப்படுத்தும் 


முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே உடனடியாக இந்த விடயத்தை பரிசீலனை செய்து முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்யுமாறு முஸ்லிம் சமுதாய மக்களின் சார்பாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments