NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மாநகராட்சி குடிநீரில் சாக்கடை கலப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்

திருச்சி மாநகராட்சி குடிநீரில் சாக்கடை கலப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்

 திருச்சி மாநகராட்சி 13 வது வார்டு வடக்கு ஆண்டாள் வீதி  பந்தடிமால் சந்து,பாண்டியன் பிள்ளை சந்து கடந்த பத்து நாட்களுக்கு மேல் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது


மாநகராட்சி பாதாள சாக்கடை பணியாளர்கள் பெயரளவுக்கு கடந்த மூன்று நாட்களாக பள்ளம்   வெட்டி குடிநீர் குழாயில் சாக்கடை கலப்பை கண்டுபிடிப்பது போல் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வேலை செய்துவிட்டு வந்த குடிநீர் குழாயையும் வெட்டிவிட்டு  சென்றுவிட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வருவதில்லை மக்கள் பெரிய பாடுபடுகின்றனர்.


கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை பகுதியை ஆய்வு செய்யவில்லை.ஆனால் இப்பகுதிக்கு மாநகராட்சி  பணியாளர்கள் தினசரி  வந்து செல்கின்றனர்.



மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாற்று ஏற்பாடுகள் உடனடியாக செய்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments