// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது திரளான பங்கேற்பு

திருச்சி ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது திரளான பங்கேற்பு

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


அதனை ஒட்டி இன்று காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்த நீர் எடுத்து வரப்பட்டது.

இது அம்மா மண்டபம் வழியாக சத்திரம் பேருந்து மற்றும் தலைமை தபால் நிலையம் வழியாக கோவில் வந்து அடைந்தது .

இதில் ஏராளமான பக்தர்கள் காவி உடை அணிந்து பால்குடம் எடுத்து வந்தனர் .






மேலும் நாளை காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வாஸ்து சாந்தி , வரும் இரண்டாம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மாலை மூன்றாம் யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. 


மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments