BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மக்கள் உரிமை கூட்டணி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

மக்கள் உரிமை கூட்டணி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கடந்த 16 ஆம் தேதி அன்று மக்கள் உரிமை கூட்டணி தெற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் என்பவரை 6 பேர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பத்தாயிரம் பணத்தை பறித்து சென்றதாகவும், இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சம்மந்தபட்ட நபர்களை இன்று வரை கைது செய்ய வில்லை, ஆனால் மாறாக அடி வாங்கிய ஜோசப்பை  கைது செய்து, சிறையில் அடைத்தனர். 




எனவே தாக்குதல் நடத்திய அருள் தேவராஜ், ஞானசேகர், சிமியன் ,ரோஷன், அவுசேக்,  ஆரோக்கியராஜ் ஆகிய 6 பேரு மீது உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் அறிவித்தனர்..



அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் உரிமை கூட்டணி சார்பாக பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடமுயன்றனர் அவர்களை காவல்துறையினர் தடுத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதனை  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டணி அமைப்பினர் தாக்குதல் நடத்திய 6 பேர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைத்து காவல்துறை அராஜகப் போக்கில் நடந்துள்ளது. 





பலமுறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, ஆகையால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.


இந்நிகழ்வில் தமிழ் புலிகள் காட்சி , சார்பாக ஜோசப் ,காசிம் ,டேனியல், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் பஷீர், தேசிய மருந்தம்  மக்கள் முன்னேற்ற கழகம் செல்வம், காவேரி மீட்புரிமை இயக்கம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments