BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவிலான போட்டிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவிலான போட்டிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு

 கராத்தே விளையாட்டைப் போல் சமீப காலமாக டேக்குவாண்டோ என்ற இந்த கொரிய தற்காப்பு கலையும் தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. ஓலிம்பிக்கில் இடம் பெற்று உள்ள இந்த விளையாட்டுக்கு கல்லூரிகள், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை இட ஒதுக்கீடு இருக்கிறது.




திருச்சிராப்பள்ளி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி இரண்டு தினங்கள் நடைபெற்று வருகிறது.




சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியே எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இரண்டு நிமிடங்களில் நடத்தப்படும் போட்டிகளில் தலை மற்றும் நெஞ்சு பகுதிகளில் கால்களால் தாக்க வேண்டும், அவ்வாறு தாக்கி அதிக புள்ளிகளை பெறும் வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்










மாஸ்டர் கணேசன் தலைமையில் நடைபெறும் இப்போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் முதல் இருஇடங்களை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது மேலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்

Post a Comment

0 Comments