BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தடவாளவியல் மேலாண்மைத் துறை மாணவர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தடவாளவியல் மேலாண்மைத் துறை மாணவர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் தடவாளவியல் மேலாண்மைத் துறை (logistics) கூட்டமைப்பின் சார்பாக மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்வாக  சிறப்பு கருத்தரங்கு மற்றும் வழிகாட்டல் நிகழ்வு நடைபெற்றது. 


தேசிய கல்லூரி ஆங்கில துறை பேராசிரியர் ஜாப் நீல் பிரவின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  தடவாளவியல்   துறையில் தொழில் முனைவோராக விரும்பும் மாணவர்களுக்கு பேச்சுத்திறமை மற்றும் மக்களிடையே தொழில் சார்ந்த  தொடர்பு திறன் (Interpersonal skill) மற்றும் அதன் பயன்பாடு குறித்தும்  விளக்கினார். இந்நிகழ்ச்சியில் தற்காலத்தில் நிலவும் நேர்முகத் தேர்வின் தன்மைகள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தடவாளவியல் துறைத்



தலைவர் தி. ஜஸ்டின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு மேலாண்மைத்துறை மாணவர் அவையோரை வரவேற்றார், தொடர்ந்து இரண்டாம் ஆண்டு மாணவர் ஜெரின் ஹாரிஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார், இறுதியாக முதலாம் ஆண்டு மாணவர் ஸ்ரீவர்சன் நன்றி கூறினார் 



சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஜாப் நீல் பிரவின்  மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கேட்ட வினாக்களுக்கு பதில் அளித்தார் பேராசிரியர் . முனைவர் கனிமொழி அவர்கள் இவ்விழாவை ஒருங்கிணைத்தார்கள். வணிகவியல் மற்றும் தடவாளவியல் மேலாண்மைத்துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments