// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமஜக புகார்

சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமஜக புகார்

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறிய நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.


தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாஹா தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கமான 


மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் ஆட்டோ தொழில் சங்க மாவட்ட செயலாளர் பாலக்கரை ஜே ஜாகீர் ஷரீஃப் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரபீக் ராஜா ஜங்ஷன் பகுதி செயலாளர் பீமநகர்சித்திக் உறையூர் பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா ஆட்டோ தொழில் சங்க பொருளாளர் சரவணன் ஆட்டோ தொழில் சங்க துணைச் செயலாளர் ராம்குமார் ஜங்ஷன் பகுதி துணை செயலாளர் பைசல் மாணவரணி உஸ்மான் அலி ஆகியோர் இன்று காவல் ஆணையரை சந்தித்து 

தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறி இது நாள் வரை தனது கருத்துக்கு வருத்தமும் தனது வார்த்தையை திரும்ப பெறாமல் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது.



Post a Comment

0 Comments