// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும் - இந்திய குடியரசு கட்சி கோரிக்கை

ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும் - இந்திய குடியரசு கட்சி கோரிக்கை

இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி இன்று திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கார்கில் போரில் உயிர் நீத்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் தேசியக் கொடியுடன் பேரணியாக சென்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.


 தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் 







ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் மருத்துவமனை கட்டித் தர வேண்டும், ராணுவ வீரர்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும், ராணுவ வீரர் உயிர் நீத்தால் அவர்களது குடும்பத்திற்கு உரிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மத்திய,  மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments