BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி அய்மான் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!..காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் பங்கேற்பு!

திருச்சி அய்மான் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!..காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் பங்கேற்பு!

திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.


இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி ரினோஷா சீரின் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் சாந்தி வரவேற்புரையாற்றினார்.


அய்மான் கல்லூரியின் தலைவர் காஜி டாக்டர்.காதர் பக்ஸ் உசேன் சித்திகி அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக கேகே நகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ராகிங் தொடர்பான விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்கள். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ராகிங் தடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.பாமிதா தபஸ்ஸு,ம் முனைவர்.பைரோஸ் பேரா.ஷாஜிதா பானு, முனைவர்.சத்தியா, முனைவர்.வெனில், முனைவர்.கனக சுந்தரி, ஜூலைகா ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.



இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு ராகிங் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பெற்றனர். 

முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.முனபர் ஹுசைனா நன்றி உரையாற்றினார்.

Post a Comment

0 Comments