BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தமஜக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் எனது மகத்தான நன்றி தெரிவித்து ராயல் சித்திக் அறிக்கை

திருச்சி தமஜக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் எனது மகத்தான நன்றி தெரிவித்து ராயல் சித்திக் அறிக்கை

 தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டத்தை வெற்றியடைய உழைத்திட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்துக் கொண்டார்.


திருச்சி பாலக்கரையில் கடந்த 26 ஆம் தேதி சனிக்கிழமை  தமஜக திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மத வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது 




மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார் மாவட்டத் துணைச் செயலாளர்கள் முஹம்மது தாஹா.அபூபக்கர் சித்திக.செபாஸ்டின்.ஆகியோர் முன்னிலை வகித்தனர் 






மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் திருச்சி மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் அவர்கள் நன்றி உரையாற்றினார்


.




இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயகத்தின் தலைவர் கே.எம்.சரிப் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  திருமாவளவன் எம்.பி.அவர்கள்,திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஹஜ்ரத் மௌலானா முப்தி ரூகுல்ஹக்  கிப்லா ஆகியோர் பங்கேற்று உரையாற்றியனர்








ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சிவ திரு திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள் அருட்பணி பாதர்.எஸ்.லூர்துசாமி அவர்கள் விடுதலை தமிழ் புழிகள் கட்சியினுடைய தலைவர் குடந்தை அரசன் அவர்கள் தேவேந்திர குல மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் அவர்கள்





திருச்சி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் கே.எம்.கே. ஹபீப் ரஹ்மான்‌,தமஜக மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் அன்சர் மில்லத்,தமஜக துணை பொதுச்செயலாளர்கள் சண்முகராஜா அவர்கள் சபீ அகமது 





தமஜக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராஜசேகர் , தமஜக இணையதள பொறுப்பாளர் எம்.எஸ்.சரிப் ராசிக்,தமஜக திருச்சி மாவட்ட தலைமை பொறுப்பாளர் பாபுஜஹான் அவர்கள்





விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தஞ்சை மண்டல செயலாளர் சதா சிவகுமார் அவர்கள்




தமஜக ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் பாலக்கரை ஜாகிர் சரிப் அவர்கள்.இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்கள்.



கூட்டத்திற்கு முன்னதாக கட்சியின் தலைவர் கே எம் செரிப் அவர்களை வரவேற்க தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக அதன் மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் தலைமையில் ஆட்டோ பேரணியாக சென்று வரவேற்றனர். ஆட்டோ பேரணியை தொழிற்சங்க மாநில தலைவர் சண்முகராஜா கொடியசைத்து துவங்கி வைத்தார். பின்பு மாவட்ட இளைஞரணி மற்றும் பழனிபாபா பேரவையின் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது நிகழ்வினை மாவட்ட இளைஞரணி செயலாளர் சேர்கான் பழனி பாபா பேரவை மாவட்ட செயலாளர் கே டி எஸ் பீர்முஹம்மது ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அனைத்து தலைவர்களுக்கும்.

பொதுக்கூட்ட பணியாற்றிய தமஜக மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும். மாவட்ட இளைஞரணி வர்த்தகர அணி ஆட்டோ தொழிற்சங்கம் மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொகுதி பொறுப்பாளர்கள் பகுதி பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக உழைத்திட்ட மாணவரணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும். பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும்.பல்வேறு வகையில் உதவி புரிந்த அத்தனை நபர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

Post a Comment

0 Comments