NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** 90 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

90 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான 90 கோடி மதிப்புடைய இடத்தை சில ஆக்கிரமிப்பு செய்து போலி பத்திரப்பதிவு செய்தது கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.


சாலமன் தேவராஜ், ராஜேஸ், ரமேஷ், மகேஸ்வரன் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எனக்கு சொந்தமான சொத்துக்களை ஏமாற்றி விட்டார்கள். 


கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து எங்களுடைய சொத்துக்களை மீட்க போராடி வருகிறோம். 

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் குழந்தைகளை வைத்து மிகவும் கஷ்டமான  சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன். 

மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய பணத்தை பெற்று தர வேண்டும் அல்லது என்னுடைய இடத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments