NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்திய நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்திய நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை டபுள் சாப்பாடு நிரம்பி வழிகிறது கக்கூஸ் என மிகவும் இழிவாக கொச்சைப் படுத்தி தினமலர் பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக வெளிப்படுத்தியது..


தினமலர் பத்திரிக்கையை கண்டித்து திருச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக சீனி விடுதலை அரசு தலைமையில் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. 




இதில் த.பெ.தி.க தோழர்கள், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா, கலைக்குழு பொறுப்பாளர் லதா மற்றும் ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம்  பு.ஜ.தொ.மு  ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதின் என திரளாக தோழர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி தினமலர் பத்திரிக்கை தீ வைத்து கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



தினமலர் ஆசிரியரை உடனடியாக கைது செய்யவும், பொதுமக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிடுவது, சினிமா நடிகைகளின் ஆபாச படங்களை தொடர்ந்து வெளியிட்டு கலாசார சீரழிவை ஏற்படுத்துவது என தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் தினமலர் பத்திரிக்கையை தடை செய்யவும் வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

Post a Comment

0 Comments