// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பொருளாதாரத் துறை மாணவர்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

பொருளாதாரத் துறை மாணவர்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

 திருச்சி தேசிய கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி இலக்கியா வரவேற்புரை வழங்கினார்.


கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் & தேர்வு நெறியாளர் முனைவர் து. ஸ்ரீதர் பெற்றோர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். 



இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் பொருளாதார துறை பேராசிரியர்கள் கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் சிவசக்தி நன்றி கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியினை வகுப்பாசிரியர் முனைவர் R.கீதா ஒருங்கிணைத்தார்.


நிருபர் ரூபன் 


Post a Comment

0 Comments