BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசியக்கல்லூரி தடவாளவியல் துறையில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

திருச்சி தேசியக்கல்லூரி தடவாளவியல் துறையில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

தேசியக் கல்லூரி தடவாளவியல் துறையில் படிக்கின்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது 


இந்நிகழ்ச்சியில் முதல்வர் டாக்டர் குமார் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். இக்கூட்டத்தின் நோக்கத்தை முன்னிறுத்தி தலைமை உரை ஆற்றினார்கள்   இதில் துறைத்தலைவர் பேராசிரியர் தி. ஜஸ்டின்  தடவாளவியல் மேலாண்மையியல் துறை முனைவர் . கனிமொழி மற்றும் மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஒழுக்கம் , மூன்றாம் ஆண்டில் மேற்கொள்ளும் தொழிற்பயிற்சி , போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி நடத்தப்பட்டது. 






மேலும் பொதுவாக கல்லூரியில் மாணவர்கள் இருக்கும் நேரம் குறைவு. வீட்டில் அவர்கள் அதிகம் இருக்கிறார்கள். படிப்பு மட்டுமின்றி , மாணவர்களின் செயல்பாடு , பழக்கவழக்கம், நடப்பு, சமூக அக்கறை, போன்றவற்றில் ஆசிரியர்களுடன் பெற்றோரும் இணைந்து செயல்படும்போது தான் மாணவர்களின் தரம் உயரும்.  அத்துடன் அவர்கள் சிறந்த மனிதவளமாக நாட்டிற்கு பங்களிக்க இயலும். என்று விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதன்மூலம் மாணவர்களின் கல்வியுடன் அவர்களின் அனைத்துவிதமான செயல்பாடுகளும் பெற்றோர்களின் கவனத்திற்கு செல்வதுடன் சிறந்த மாணவர்களுக்கு மேலும் சிறப்பும் , தவறும் மாணவர்களுக்கு நல்வழிக்கு இட்டுச்செல்லும் ஆற்றுப்படுத்துதலும் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments