BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான்

 திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக 8-வது முறையாக மாரத்தான் போட்டி திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள சாலையில் இன்று துவங்கியது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர் சிறுமியருக்கு தனி பிரிவாகவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனி பிரிவாகவும் மற்றும் பெண்களுக்கு தனி பிரிவாகவும் நடத்த திட்டமிட்டு இருந்தது.


ஆனால் இன்று காலை 6 45 மணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கு பெறவும் காலை 7 மணிக்கு மேல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு பெரியவர்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டியை அமைச்சர் கே என் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.




அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மாரத்தான் போட்டியில் 18 வயது மேற்பட்டவர்களும் பெண்களும் சிறுவர் சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக மாரத்தான் போட்டியை நடத்தாமல் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரை ஒட்டுமொத்தமாக சாலையில் ஓடுமாறு வலிறுத்தினர்.

Post a Comment

0 Comments