NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** உங்கள் தோழன் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

உங்கள் தோழன் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

 உங்கள் தோழன் அறக்கட்டளை சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.


உங்கள் தோழன் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து திருச்சி தென்னூர் ஆல் சயின்ஸ் நடுநிலைப்பள்ளியில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. 







இந்த இலவச மருத்துவ முகாமை திமுக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு தொடங்கி வைத்தார். அருகில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநில பொருளாளர் முகமது மீரான் உங்கள் தோழன் அறக்கட்டளை சமூக செயற்பாட்டாளர் அப்துல் ரஹீம், ரெஜிமென்ட் பஜார் பள்ளிவாசல் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் உடன் இருந்தனர்.



இந்த இலவச மருத்துவ முகாமில் கண் சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை முகாம், உடல் எடை, ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய், காய்ச்சல், சளி உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் தென்னூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்.

Post a Comment

0 Comments