NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** உலக முதியோர் தின நிகழ்வில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உலக முதியோர் தின நிகழ்வில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 அக்டோபர் 1 உலக முதியோர் தினத்தில் திருச்சி மாவட்டம் துரைசாமிபுரத்தில் தாய் வீடு உதவும் கரங்கள் சேவை மையம் சார்பில் ஆதரவற்ற ஏழ்மையில் உள்ள முதியவர்களான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கதர் சால்வை அணிவித்து மரியாதை செய்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் பாய் போர்வை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..


இந்நிகழ்வில் Rtn.சரவணகுமார் Rtn.அழகேசன் தாய் வீடு உதவும் கரங்கள் சேவை மையத்தின் ஆலோசகர்கள் சுந்தரேசன் மாலினி நிர்வாகிகள் புவனேஸ்வரி  அரவிந்தன் மணிவேல் சர்மிளா மற்றும்  தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு மரியாதை செய்து  அவர்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்கினர்...










இந்த நிகழ்விற்க்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலரும் தாய் வீடு உதவும் கரங்கள் சேவை மையத்தின்  நிர்வாகியுமான தாய் வீடு சிவக்குமார் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Post a Comment

0 Comments