BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இஸ்லாமியர் விடுதலை குறித்து தமிழக முதல்வரின் பதில் உரை ஏற்க முடியாது...! தமஜக தலைவர் செரீப் அறிக்கை

இஸ்லாமியர் விடுதலை குறித்து தமிழக முதல்வரின் பதில் உரை ஏற்க முடியாது...! தமஜக தலைவர் செரீப் அறிக்கை

 தமிழக சட்டபேரவை நடைபெற்றது வருகிறது..சட்டபேரவை கூட்ட தொடரில் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது ..


சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் பதில் உரை ஏற்றுக்கொள்ளவே இயலாது!‌ என‌ தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.... அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது...



தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உரைக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பேச்சு தமிழக இஸ்லாமிய சமூகத்திற்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. 



சிறைவாசிகள் விடுதலைக்கு தமிழக ஆளுநர் பக்கம் கைகாட்டுகிற தமிழக முதல்வர் கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏன் விடுதலை செய்யவில்லை என்கிற கேள்வியை முன் வைத்திருக்கிறார். 




எப்போது ஆளுநர் கையெழுத்து போடுகிறாரோ அப்போதே விடுதலை என கைவிரிக்கிறார். தனது கையில் இருக்கிற பந்தை ஆளுநர்  பக்கமும், அ.தி.மு.க. பக்கமும் தள்ளி விடுகிறார். உண்மையில் கடந்த 2016 தேர்தலிலேயே கோவையில் சிறைவாசிகள் குடும்பங்களுடன் நடந்த சந்திப்பிலேயே திமுக  ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக சிறைவாசிகள் விடுதலை என்கிற உத்தரவாதத்தை கொடுத்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை இப்போது அந்த வாக்குறுதியை மறந்துவிட்டார்.



இன்றைய தி.மு.க. ஆட்சிக்கு முழு காரணமானவர்கள் தமிழக முஸ்லிம்கள். 99 சதவிகித முஸ்லிம்கள் தி.மு.க. விற்கே வாக்களித்தனர். பா.ஜ.க. கூட்டணியில் இருந்ததால் அ.தி.மு.க. விற்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் தி.மு.க.விற்கே வாக்களித்துள்ளனர்.







செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர, ஆளுநரின் அனுமதி இல்லாமல் தானே உத்தரவு போடுவதும், முஸ்லிம்கள் என்று வந்துவிட்டால் ஆளுநரை காரணம் காண்பிப்பதும் ஒரு ஏமாற்று வேலையாகவே தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கருதுகிறது. எனவே வாக்களித்த மக்களுக்கு குறைந்த பட்ச நன்றியாக ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முன் வைக்கிறது‌ என கோரிக்கை வைத்தார்.

Post a Comment

0 Comments