BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை ஆணையர் அன்பு பங்கேற்பு

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை ஆணையர் அன்பு பங்கேற்பு

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக  கண்பார்வை தினத்தன்று மக்களுக்கு கண்  பார்வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி ஆண்டுதோறும் சுமார் 43 மில்லயன் மக்கள் கண்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில்  உலக பார்வை தினமான இன்று திருச்சி ஜோசப் கண்மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளைஸ், டயமண்ட் சிட்டி குயினஸ் மற்றும் ஜமால்முகமது கல்லூரி இணைந்து உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.


அதைத் தொடர்ந்து ஜோசப் கண் மருத்துவமனையில் விழிப்புணர்வு பலூன் பறக்க விடப்பட்டது.மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு, உதவி போலீஸ் கமிஷனர் குத்தாலிங்கம் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.



இதில் 1000 மேற்பட்ட ஜமால் முகமது கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவிகள், ஜமால் முகமது கல்லாரி செயலர் மற்றும் தாளாளர் டாக்டர்

காஜா நஜீமுதீன், ஜோசப் கண்மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் ஜமால்முகமது கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அனைவரும் தங்களது கண்களை பாதுகாத்துக் கொள்வாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ரோட்டரி மாவட்டம் 3000 ன் முன்னாள் ஆளுநர் கோபால் கலந்து கொண்டார். இதில் மாணவர்கள் வரிசையாக நின்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் ரோட்டரி பட்டர்பிளை, டயமண்ட் சிட்டி குயின்ஸ் சங்கங்களின் தலைவர்கள் சுபா பிரபு,சிவா சரண்யா, செல்வராஜ், செயலாளர்கள் பராசக்தி,  பிரியா லோகநாதன் மற்றும் இரு சங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

முடிவில் முடிவில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபாபிரபு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments