NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு

இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு

இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு...!


திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் தென்னூர் ஹைரோடு பள்ளிவாசலில் நடைபெற்றது. இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேலின் அத்துமீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் விதமாகவும் வருகின்ற 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


நத்தர்ஷா தர்கா அருகில் பேரணி தொடங்கி பாலக்கரை ரவுண்டானா அருகில் நிறைவு பெற்று பின்னர் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஜாகீர் தலைமையில் நடைபெற உள்ள இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.ஷெரீப் மற்றும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஹைதர் அலி ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளனர். 


 பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்த பேரணி மற்றும்  பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்குமாறு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments