// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருச்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

 திருச்சியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில்,  மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.


அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட, மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பில், பகுதி கழகச் செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில், சின்னகடை வீதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
பூத் கமிட்டி  மாவட்ட பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைக்கப்பட்ட நிலை குறித்தும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கையேடு, ஆதார் எண் இணைப்பு, தொடர்பு எண் ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தினார்.





இதில் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பொறியாளர் இப்ராம்ஷா, கவுன்சிலர் அரவிந்தன், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments